ப்ராக்ஸி ரெசொல்யூஷனின் போது, Google Chrome பயன்படுத்தும் PAC ஸ்கிரிப்ட்டுகளுக்கு (ப்ராக்ஸி ஆட்டோ கான்ஃபிகரேஷன்) https:// URLகளை அனுப்பும் முன், அதன் தனிப்பட்ட மற்றும் பாதுகாப்பு தொடர்பான முக்கியப் பகுதிகளை அகற்றும்.
சரி என அமைத்தால், பாதுகாப்பு அம்சம் இயக்கப்பட்டு, PAC ஸ்கிரிப்டிற்குச் சமர்ப்பிக்கும் முன் https:// URLகள் அகற்றப்படும்.
இந்த முறையில், பொதுவாக என்கிரிப்ட் செய்த சேனல் பாதுகாக்கும் தரவை (எ.கா: URL இன் தடம் மற்றும் வினவல் போன்றவை) PAC ஸ்கிரிப்ட்டினால் பார்க்க முடியாது.
தவறு என அமைத்தால், பாதுகாப்பு அம்சம் முடக்கப்படுவதோடு, https://
URL இன் எல்லா பகுதிகளையும் பார்க்க PAC ஸ்கிரிப்ட்களுக்கு அனுமதி வழங்கப்படும். எங்கிருந்து பெறப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல் எல்லா PAC ஸ்கிரிப்ட்டுகளுக்கும் (பாதுகாப்பற்ற டிரான்ஸ்போர்ட் மூலம் பெறப்பட்டவை அல்லது பாதுகாப்பற்ற முறையில் WPAD மூலம் கண்டறியப்பட்டவை உட்பட) இந்த அமைப்பு பொருந்தும்.
Chrome OS எண்டர்பிரைஸ் பயனர்களைத் (தற்போது இந்த அமைப்பு இயல்பாகவே தவறு என அமைக்கப்பட்டிருக்கும்) தவிர்த்து, பிறவற்றில் இந்த அமைப்பு இயல்பாகவே சரி (பாதுகாப்பு அம்சம் இயக்கப்பட்டிருக்கும்) என அமைக்கப்பட்டிருக்கும்.
இதைச் சரி என அமைக்கும்படி பரிந்துரைக்கிறோம். தற்போதுள்ள PAC ஸ்கிரிப்ட்டுகளுடன் இணங்குவதில் சிக்கல் இருந்தால் மட்டுமே இதைத் தவறு என அமைக்கவும்.
மீறிச் செயல்படும் இந்த விருப்பத்தை வருங்காலத்தில் அகற்றுவதே எங்கள் நோக்கமாகும்.
Registry Hive | HKEY_LOCAL_MACHINE or HKEY_CURRENT_USER |
Registry Path | Software\Policies\Google\Chrome |
Value Name | PacHttpsUrlStrippingEnabled |
Value Type | REG_DWORD |
Enabled Value | 1 |
Disabled Value | 0 |