பொது அமர்வுக்கான பரிந்துரைக்கப்பட்ட மொழிகளை அமைக்கும்

பொது அமர்வுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்ட ஒன்று அல்லது மேற்பட்ட மொழிகளை அமைத்து, இந்த மொழிகளில் ஒன்றைப் பயனர்கள் எளிதாகத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கும்.

பொது அமர்வைத் தொடங்கும் முன் மொழியையும் விசைப்பலகைத் தளவமைப்பையும் பயனர் தேர்வுசெய்யலாம். இயல்பாக, Google Chrome OS ஆதரிக்கும் அனைத்து மொழிகளும் அகரவரிசையில் பட்டியலிடப்படும். பரிந்துரைக்கப்பட்ட மொழிகளின் தொகுப்பைப் பட்டியலின் மேல்பகுதிக்கு நகர்த்த இந்தக் கொள்கையை நீங்கள் பயன்படுத்தலாம்.

இந்தக் கொள்கை அமைக்கப்படாவிட்டால், தற்போதைய UI மொழி முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டால், பரிந்துரைக்கப்பட்ட மொழிகள் பட்டியலின் மேல்பகுதிக்கு நகர்த்தப்பட்டு, பிற மொழிகளில் இருந்து தனியாகக் காட்சிப்படுத்தப்படும். பரிந்துரைக்கப்பட்ட மொழிகள் கொள்கையில் வழங்கப்பட்டுள்ள வரிசைப்படி பட்டியலிடப்படும். பரிந்துரைக்கப்பட்ட முதல் மொழி முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட பரிந்துரைக்கப்பட்ட மொழிகள் இருந்தால், பயனர்கள் அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்கள் எனக் கருதப்படும். பொது அமர்வைத் தொடங்கும் போது மொழி மற்றும் விசைப்பலகைத் தேர்ந்தெடுப்பு முக்கியமானதாக வழங்கப்படும். இல்லாவிட்டால், பெரும்பாலான பயனர்கள் முன்பே-தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியைப் பயன்படுத்த விரும்புவார்கள் என்று கருதப்படும். பொதுவான அமர்வைத் தொடங்கும் போது மொழி மற்றும் விசைப்பலகைத் தளவமைப்புத் தேர்ந்தெடுப்பு, குறைவான முக்கியத்துவத்துடன் வழங்கப்படும்.

இந்தக் கொள்கை அமைக்கப்பட்டு தானியங்கு உள்நுழைவு இயக்கப்பட்டிருக்கும்போது (|DeviceLocalAccountAutoLoginId| மற்றும் DeviceLocalAccountAutoLoginDelay| கொள்கைகளைப் பார்க்கவும்), தானாகத் தொடங்கப்படும் பொது அமர்வு, முதலாவது பரிந்துரைக்கப்பட்ட மொழியையும் இந்த மொழியுடன் பொருந்தக்கூடிய மிகவும் பிரபலமான விசைப்பலகைத் தளவமைப்பையும் பயன்படுத்தும்.

முன்பே-தேர்ந்தெடுக்கப்பட்ட விசைப்பலகைத் தளவமைப்பு முன்பே-தேர்ந்தெடுக்கப்பட்ட மொழியுடன் பொருந்தும் மிகவும் பிரபலமான தளவமைப்பாகவே எப்போதும் இருக்கும்.

இந்தக் கொள்கையை பரிந்துரைக்கப்பட்டதாக மட்டுமே அமைக்க முடியும். இந்தக் கொள்கையைப் பயன்படுத்தி பரிந்துரைக்கப்பட்ட மொழிகளின் தொகுப்பை மேல்பகுதிக்கு நகர்த்தலாம் ஆனால் பயனர்கள் தங்கள் அமர்வுக்கு Google Chrome OS ஆதரிக்கும் எந்த மொழியையும் தேர்வுசெய்ய எப்போதும் அனுமதிக்கப்படுவார்கள்.

Supported on: SUPPORTED_WIN7

பொது அமர்வுக்கான பரிந்துரைக்கப்பட்ட மொழிகளை அமைக்கும்

Registry HiveHKEY_CURRENT_USER
Registry PathSoftware\Policies\Google\ChromeOS\SessionLocales
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

chromeos.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)