மாற்று உலாவியில் திறக்க வேண்டிய ஹோஸ்ட்கள்

மாற்று உலாவியில் திறக்க வேண்டிய ஹோஸ்ட் டொமைன் பெயர்களின் பட்டியலைக் குறிப்பிட உங்களை அனுமதிக்கும்.

கொள்கை இயக்கத்தில் இருந்தால், மாற்று உலாவிக்கு மாறுவதற்குத் தூண்டும் வடிப்பான்களின் பட்டியலை நீங்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு உள்ளீடும், பின்வரும் நான்கு வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:

ஹோஸ்ட் பெயர் பகுதி: "www.example.com" போன்ற முழுமையான டொமைன் பெயர்களைக் குறிப்பிட வேண்டும் அல்லது அதன் பகுதியான "example.com" அல்லது "example" என்பதையும் கூட குறிப்பிடலாம். வைல்டுகார்டுகள் இன்னும் ஆதரிக்கப்படவில்லை.
URL முன்னொட்டு: தேவைப்பட்டால், சரியான URL முன்னொட்டுகள் மட்டுமே நெறிமுறை மற்றும் போர்ட் உடன் முழுமையாக ஒப்பிடப்படும். எ.கா: "http://login.example.com" அல்லது "https://www.example.com:8080/login/".
எதிர்மறை உள்ளீடு: "!" என்பதில் தொடங்கி, மேலே குறிப்பிட்ட ஹோஸ்ட் பெயரின் பகுதியாக அல்லது URL முன்னொட்டாக வரும். எதிர்மறை உள்ளீடுகள் எப்போதும் Chrome இல் திறக்கப்படும். எ.கா: "!example.com" அல்லது "!file:///c:/localapp/".
சிறப்புக் குறி உள்ளீடு: "*" என்ற ஒரே ஒரு எழுத்துக்குறி மட்டுமே இருக்கும். எந்த URL உடனும் பொருந்தும். பெரும்பாலான URLகளை மாற்று உலாவியில் திறக்க வேண்டும், சில URLகளை மட்டுமே Chrome இல் திறக்க வேண்டும் என்ற சூழலில், எதிர்மறை உள்ளீடுகளுடன் சேர்த்துப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

நேர்மறை உள்ளீடுகளை விட எதிர்மறை உள்ளீடுகளுக்கே அதிக முன்னுரிமை உள்ளது, இது டொமைனின் பெரும்பாலான பகுதிகளை ஏற்புப்பட்டியலாக்க அனுமதிக்கும். அதே சமயம், சிறிய பகுதிகளை Chrome இல் திறப்பதற்காகச் சேமிக்கும்.
சிறப்புக் குறி உள்ளீடு இருந்தால், மற்ற எல்லா விதிகளும் சரிபார்க்கப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படும்.

பின்வரும் நெறிமுறைகள் திருப்பிவிடுவதற்காகக் கண்காணிக்கப்படுகின்றன: http:, https:.

குறிப்பிடவில்லை என்றாலோ அல்லது வெறுமையாக விட்டாலோ மாற்று உலாவிக்கு மாறுவதற்குத் தூண்டாது.

Supported on: Microsoft Windows XP SP2 அல்லது அதற்கு பிந்தைய பதிப்பு

மாற்று உலாவியில் திறக்க வேண்டிய ஹோஸ்ட்கள்

Registry HiveHKEY_LOCAL_MACHINE
Registry PathSoftware\Policies\Google\Chrome\3rdparty\Extensions\heildphpnddilhkemkielfhnkaagiabh\policy\url_list
Value Name{number}
Value TypeREG_SZ
Default Value

legacybrowsersupport.admx

Administrative Templates (Computers)

Administrative Templates (Users)